ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், அஜித், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்துள்ள 'துணிவு' படம் பொங்கலுக்கு வெளியாகும் என்றுதான் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தத் தேதியில் வெளியாகும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ள லைக்கா நிறுவனம் அமெரிக்கா, யுகே நாடுகளில் 'துணிவு' படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை போஸ்டருடன் டுவீட் செய்துள்ளது. பொதுவாக இந்தியாவில் குறிப்பிட்ட தினத்தில் காலையில் வெளியானால், அமெரிக்க நேரப்படி ஒரு நாள் முன்னதாக அங்கு வெளியாகும். அப்படிப் பார்த்தால் ஜனவரி 12ம் தேதியன்று இந்தியாவில் 'துணிவு' வெளியாகும் எனத் தெரிகிறது.
தேதியுடன் கூடிய இந்திய வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், அமெரிக்கா, யுகே வெளியீடு பற்றிய அறிவிப்பு முதலில் வெளியாகியுள்ளது. அது போலவே விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 'வாரிசு' படம் அமெரிக்காவில் ஜனவரி 12 வெளியாகும் என அதன் அமெரிக்க வினியோகஸ்தர் இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
இரண்டு படங்களின் வெளிநாட்டு வெளியீட்டுத் தேதிப்படி பார்த்தால் 'துணிவு' படம் ஜனவரி 12ம் தேதியும், 'வாரிசு' படம் ஜனவரி 13ம் தேதியும் தமிழகத்தில் வெளியாகலாம்.