நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஏற்கனவே முப்பது ஆண்டுகளுக்கு முன் விக்ரம் படத்தில் கமல் நடித்திருந்த கதாபாத்திரத்தையும், கைதி படத்தில் இடம்பெற்றிருந்த நரேனின் கதாபாத்திரத்தையும் ஒன்றாக இணைத்து லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்கிற கான்செப்ட்டில் இந்த படத்தை உருவாக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். இதில் கூடுதல் இணைப்பாக ரோலக்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் சூர்யாவையும் கிளைமாக்ஸில் சேர்த்திருந்தார்.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இதற்கு அடுத்ததாக அவர் கைதி-2 படத்தை இயக்கப்போவதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பிரபல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்கிற ஒரு ஆன்லைன் கான்பரன்சில் கமல், லோகேஷ் கனகராஜ், பிரித்விராஜ், ராஜமவுலி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டபோது அதில் விஜய் படத்தை தொடர்ந்து அவர் இயக்கும் படம் எது, அதில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கும் இடம் உண்டா என்கிற கேள்வி லோகேஷ் கனகராஜிடம் எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் இந்த விக்ரம் படம் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்கிற கான்செப்ட்டில் எடுக்கப்பட்டுள்ளதால், இதற்கு அடுத்ததாக எடுக்கப்படும் படம் கைதி-2 அல்லது விக்ரம்-2 என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது இந்த படங்களின் சீக்வல் ஆகவும் இருக்கலாம், ப்ரீக்வல் ஆகவும் இருக்கலாம்.. எப்படி எடுத்தாலும் அதில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை இணைக்க முடியும்.. அந்த வகையில் இன்னும் பத்து ஆண்டுளுக்கு நான் செட்டில் ஆகிவிட்டேன்” என்று கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.