மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் |
சென்னை : தமிழக அமைச்சராக உதயநிதி பதவியேற்றார். ‛‛மாமன்னன் படமே எனது கடைசி படம். இனி படங்களில் நடிக்க மாட்டேன். கமல் படத்திலிருந்து விலகிவிட்டேன்'' என கூறியுள்ளார் உதயநிதி.
நடிகரும், தயாரிப்பாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ.,வும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி சுப முகூர்த்த நாளில் நல்ல நேரமான காலை 9:30 மணிக்கு தமிழக அமைச்சராக பதவியேற்றார் . அவருக்கு 'இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை' ஒதுக்கப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகையில் உள்ள 'தர்பார் ஹாலில்' பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், அமைச்சராக' உதயநிதிக்கு கவர்னர் ரவி பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, ‛‛தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவதே எனது லட்சியம். என் மீது வரும் விமர்சனங்களுக்கு ஆக்கபூர்வமான செயலால் பதில் சொல்லுவேன். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான் நடித்துள்ள மாமன்னன் படமே எனது கடைசி திரைப்படம். இனி படங்களில் நடிக்க மாட்டேன். கமல் தயாரிப்பில் நான் நடிப்பதாக இருந்த படத்திலிருந்து விலகிவிட்டேன். அவரிடமும் அதை தெரிவித்துவிட்டேன். அவரும் ஏற்றுக் கொண்டார்.
இவ்வாறு உதயநிதி தெரிவித்தார்.