முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா |

வினோத் இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‛துணிவு'. மஞ்சுவாரியர், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். வங்கி கொள்ளை தொடர்பான கதையில் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. வருகிற பொங்கலுக்கு படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் முதல் பாடலாக சில்லா சில்லா என்ற பாடலை இன்று(டிச., 9) மாலை 6:30 மணிக்கு வெளியிட்டனர். ஜிப்ரான் இசையமைக்க, அனிருத் பாடி உள்ளார். வைசாக் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.
‛‛இருப்பது ஒரு லைப் அடிச்சுக்க ஜியர்ஸ்... போனதெல்லாம் போகட்டும் தேவையில்ல டியர்ஸ்... என்னைக்குமே படச்சவன் துணை நமக்கு மனசுல போராட துணிவிருக்கு....'' என்பது மாதிரியான பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன.
துள்ளல் பாடலாக வெளியாகி உள்ள இந்த பாடல் வாழ்க்கையை துணிவுடன் மகிழ்ச்சியாகவும் ஏற்று எப்படி பயணிக்க வேண்டும் என்பதை கூறும் விதமாகவும் உள்ளது. பாடல் வெளியான 15 நிமிடத்தில் ரசிகர்கள் வைரலாக்கி டிரெண்ட் செய்தனர்.