குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் |
ஏர்டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் ‛சூரரைப்போற்று'. சுதா இயக்க கோபிநாத் வேடத்தில் சூர்யா நடித்தார். அவருடன் அபர்ணா பாலமுரளி, கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்தார். பாராட்டுகளை பெற்ற இந்த படம் 5 தேசிய விருதுகளையும் வென்றது. தற்போது இந்த படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீ-மேக் செய்து வருகிறார் சுதா.
இந்த படத்தை அடுத்து தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கையை தழுவி சுதா படம் இயக்க போவதாக தகவல் வெளியானது. ஆனால் இதை மறுத்துள்ளார். இதுபற்றி சுதா கூறுகையில், ‛‛ரத்தன் டாடாவின் மிகப்பெரிய ரசிகை நான். ஆனால் அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாகும் எண்ணம் இப்போதைக்கு எனக்கு இல்லை. எனது அடுத்த படம் பற்றிய அனைவரின் ஆர்வத்தை காட்டிய அனைவருக்கும் என் நன்றி. விரைவில் அறிவிக்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.