சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு |

ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் கன்னடத்தில் வெளிவந்த படம் 'காந்தாரா'. படம் அங்கு வெளியான இரண்டு வாரங்களுக்குப் பிறகு தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். அக்டோபர் 14ம் தேதி தமிழில் வெளியான இந்தப் படம் இன்றுடன் 50வது நாளைத் தொட்டிருக்கிறது.
ஓடிடியில் வெளிவந்த பின்னும் ஒரு டப்பிங் படம் தமிழகத்தில் ஓடி வருவது ஆச்சரியம்தான். உலக அளவில் 400 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்தாலும் மற்ற மொழிகளில் அதன் வசூலை ஒப்பிடும் போது தமிழ்ப் பதிப்பிற்கான வசூல் குறைவாகத்தான் உள்ளது. இங்கு சுமார் 10 கோடி வரைதான் வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள். மலையாளத்தில் இதைவிடவும் அதிகமாக 15 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
கன்னடத்தில் தயாரான இந்தப் படத்தைத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டனர். கர்நாடகாவில் பேசப்படும் மற்றொரு மொழியான துளு மொழியிலும் இப்படத்தை டப்பிங் செய்து நேற்று டிசம்பர் 2ம் தேதி வெளியிட்டுள்ளனர்.