போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் | ஆந்தாலஜி கதையில் உருவாகும் 'வவ்வல்ஸ்' | 40 படங்களில் போலீசாக நடித்த சமுத்திரக்கனி | விதார்த்தின் புதிய படம் 'தொடக்கம்' | பிளாஷ்பேக்: சிரஞ்சீவிக்கு கொடுத்த வாக்கை 9 வருடங்களுக்கு பிறகு காப்பாற்றிய பாரதிராஜா | ஏஆர் ரஹ்மானின் தெலுங்கு 'பெத்தி' பாடல் புதிய சாதனை | பிளாஷ்பேக்: கடன் பற்றி எச்சரித்த முதல் படம் |

பாலிவுட் சினிமாவின் பிக் பி என அழைக்கப்படுபவர் நடிகர் அமிதாப் பச்சன். அவரது மகன் நடிகர் அபிஷேக் பச்சன். இப்படி அவர்களது பெயரின் பிற்பகுதியில் இணைத்துள்ள பச்சன் என்கிற பெயர் ஜாதியை குறிக்கவில்லை என்கிற ஒரு தகவலை தன்னிலை விளக்கமாக கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.
ஹிந்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கோன் பனேகா குரோர்பதி 14-ஆவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார் அமிதாப் பச்சன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ருச்சி என்கிற பெண் போட்டியாளரிடம் அமிதாப் பேசும்போது, உங்கள் பெயரின் பின்னால் துணை பெயர் எதுவும் இல்லையே.. என்ன காரணம் என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த அந்தப்பெண் துணைப்பெயர் வைத்துக் கொள்ளும்போது அது நமக்கு சாதிரீதியாக ஒரு அடையாளத்தை கொடுத்து விடுகிறது. நம்முடைய முதல் பெயரே நம்முடைய தனித்தன்மையை சொல்வதாக இருக்க வேண்டும். அதனால்தான் எந்த ஒரு துணைப்பெயரையும் சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூறினார். இதனைத் தொடர்ந்து அமிதாப்பச்சன் தன்னிலை அளிக்கும் விதமாக, தனது பெயருக்குப் பின்னால் பச்சன் என்கிற துணைப்பெயர் எப்படி இனிந்தது என இதுவரை வெளியிடாத ஒரு காரணத்தை கூறினார்.
“பச்சன் என்பது ஒரு ஜாதியின் பெயரோ அல்லது ஒரு சமூகப் பிரிவோ அல்ல.. அது என்னுடைய தந்தையின் செல்லப்பெயர்.. என்னை பள்ளியில் சேர்க்கும்போது, ஆசிரியர் என் தந்தையிடம் என் பெயருக்கு துணைப்பெயர் என எதுவும் இல்லையே என்று கேட்டபோது, பச்சன் என சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். அப்போது இருந்துதான் அமிதாப் பச்சன் என என் பெயர் மாறியது” என்று கூறினார் அமிதாப் பச்சன்.