நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் |

நடன இயக்குனர்கள் நடிகர்களாவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. பிரபுதேவா, லாரன்ஸ், ஹரிகுமார், தினேஷ், ஸ்ரீதர் உள்பட ஏராளமானவர்கள் நடிகர்களாகி இருக்கிறார். இவர்களை தொடர்ந்து அடுத்து வருகிறார் ஜாய்மதி . இவர் 100 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணிபுரிந்து , குறும்படங்களில் நடித்தும், இயக்கியும் அனுபவம் பெற்றவர் . நற்பவி என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
ஜாய் மதியுடன் ப்ரீத்தி, மதுமிதா, காவியா, சந்தானபாரதி, சம்பத்ராம், பாலசுப்ரமணியம், முனீஷ், ஈஸ்வர் சந்திரபாபு, ஷர்மிளா, யாசர், தர்ஷன், நதீம், முல்லை, கோதண்டம், ஜெமினிபாலு உள்பட பலர் நடிக்கின்றனர். விஜய் திருமூலம் ஒளிப்பதிவையும், தயானந்த் பிறைசூடன் இசையையும் கவனிக்கிறார்கள்.
அறிமுக இயக்குனர் எஸ்.ஜே.திவாகர் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: நம் நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம். அப்படி விவசாயம் செய்துவரும் கதாநாயகனுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தால் அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்.
இதற்கிடையில் முறைப்பெண்ணின் காதல், இவரை விரும்பும் இன்னொரு பெண், கோவில் திருவிழா, கிராமத்தின் முன்னேற்றம் என பல்வேறு பிரச்சனைகளை கதாநாயகன் சமாளிக்க போராடும் நிலையில் ஒரு கொலை பழியும் நாயகன் மீது விழுகிறது.
இதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடும் நாயகன் வாழ்வில் அந்த திடுக்கிடும் சம்பவம் நிகழ்கிறது. இப்படி விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை படம் பார்ப்பவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் படத்தை இயக்கி உள்ளேன். என்கிறார் இயக்குனர்.




