பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு திரைப்படம் முதன் முதலில் ரூ.500 கோடியைத் தொடப் போகிறது என்பது ஒரு சரித்திரம். அந்த சாதனையை சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன்' படம் அடுத்த சில நாட்களில் நிகழ்த்த உள்ளது. விரைவில் தயாரிப்பு நிறுவனமே படம் 500 கோடியைக் கடந்தது என்ற அறிவிப்பை வெளியிடலாம்.
கடந்த வாரம் 450 கோடி வசூலைக் கடந்ததாக அறிவித்திருந்தார்கள். அதற்குப் பிறகு தீபாவளி விடுமுறை நாட்களிலும் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது. தீபாவளிக்கு வெளியான இரண்டு படங்களுடனும் போட்டி போட்டு 'பொன்னியின் செல்வன்' படமும் நல்ல வசூலைப் பெற்று திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த வார நாட்களிலும் பல தியேட்டர்களில் நல்ல முன்பதிவு நடைபெற்றுள்ளது.
படம் வெளியான மற்ற மொழிகளில் அதிக வசூலைப் பெறாமல் தமிழில் மட்டுமே 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற மொழிகளிலும் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருந்தால் 1000 கோடி வசூலைத் தொட்டிருக்கும். ஆனால், படத்தை தமிழ் மன்னனின் வாழ்க்கை வரலாற்றுப் படம், அதை ஏன் நாம் பார்க்க வேண்டும் என மற்ற மொழி ரசிகர்கள் நினைத்தது படத்திற்கு அந்தந்த மொழிகளில் மைனஸ் ஆகிவிட்டது.