மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
ஸ்கை ஹை ப்ளை என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் பொன்ராஜ் தயாரித்திருக்கும் படம் 'வாய்ப்பில்ல ராஜா'. புதுமுக நடிகர் சாஹர் கதையின் நாயகனாகவும், மதுமிதா கதையின் நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். ஈ.ராமதாஸ், ஜெகந்நாதன், ஹீரோ குமார், மறைந்த நடிகர் தவசி மற்றும் நடிகை ரங்கம்மா பாட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹமரா சிவி இசையமைத்திருக்கிறார். ரா.மாணிக்கம் இயக்கி உள்ளார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: கிராமிய பின்னணியில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. கல்லூரிக்கு சென்று படிக்கும் நாயகியை, அதே ஊரைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் காதலிக்கிறான். இந்நிலையில் அந்த ஊருக்கு கிராம நிர்வாக அதிகாரியாக நாயகன் வருகிறார். உள்ளூர் இளைஞனை காதலிக்கும் நாயகி, கிராம நிர்வாக அதிகாரி மீது தன் காதல் பார்வையை வீசுகிறார். இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் இளைஞன், அவர்களின் காதலை பிரிக்க திட்டமிடுகிறார் அந்தத் திட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதுதான் திரைக்கதை.
இன்றைய வேகமான உலகத்தில் தினம் தினம் ஒவ்வொரு வயதினரும் வெவ்வேறு வகையான மன அழுத்தங்களுக்கும், மன உளைச்சல்களுக்கும் ஆளாகிறார்கள். அவர்களுக்கு இதுபோன்ற காமெடி படங்கள் தேவைப்படுகிறது. ஒரு அரசியல் தலைவர் அடிக்கடி மேடையில் உச்சரிக்கும் வாய்ப்பில்ல ராஜா என்ற வாக்கியம் பிரபலம் என்பதால் படத்திற்கு தலைப்பாக அதனை வைத்திருக்கிறோம். என்றார்.