கைதி பாணியில் உருவாகியுள்ள வீர தீர சூரன் | சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் பவன் கல்யாண்? | இளம் இயக்குனர்களுடன் ரஜினி திடீர் சந்திப்பு | ஐபிஎல் கிரிக்கெட்டில் அனிருத் கச்சேரி | பிளாஷ்பேக் : ஏகாதசி விரதத்தை பிரபலமாக்கிய படம் | துபாயில் அட்லி - அல்லு அர்ஜுன் தீவிர ஆலோசனை | வீர தீர சூரன் OTT-யில் வருமா? வராதா? | நெட்பிளிக்ஸிலும் வரவேற்பை பெற்ற "டிராகன்" | எல் 2 எம்புரான் - முதல் நாள் முன்பதிவிலும் சாதனை | ராஜமவுலி படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிருத்விராஜ் |
பிலிம் சேம்பர் என்று அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்படுவார்கள். அதன்படி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்தது. இதில் ரவி கொட்டாரக்கரா தலைமையிலான அணியினர் பெரும்பான்மையாக வெற்றி பெற்றனர்.
தலைவராக ரவி கொட்டாரக்கரா, துணைத்தலைவர்களாக ஜி.பி. விஜயகுமார், டி.எஸ். ராம்பிரசாத், கே.எஸ். ராமகிருஷ்ணா, செயலாளர்களாக டி.ஏ.அருள்பதி, கிருஷ்ணாரெட்டி, பொருளாளராக என்.இராமசாமி (தயாரிப்பாளர் சங்க தலைவர்), செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.தாணு, கே.பிரபாகரன், எஸ். கதிரேசன், ஆர்.மாதேஷ், எம்.கபார், என்.விஜயமுரளி, மதுரை ஷாகுல்அமீது உட்பட 44 பேர் தேர்தெடுக்கப்பட்டனர். இவர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். தேர்தல் அதிகாரியாக முன்னாள் தலைவர் கல்யாண் பணியாற்றினார்.