நான் யார் என்று எனக்கே தெரியவில்லை : மணிரத்னம் பட நடிகை அதிர்ச்சி தகவல் | இரண்டு நடிகர்களுக்கு போதைப்பொருள் சப்ளை ; கைதான பெண் வாக்குமூலம் | ‛இளமை எனும் பூங்காற்று...' புகழ் நடிகர் ரவிக்குமார் காலமானார் | 'எம்புரான்' தயாரிப்பாளர் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை | சினிமா மோகத்தால் சீரழியும் பெண்கள்.... எங்கே செல்லும் இந்த பாதை! | குட் பேட் அக்லி டிரைலர் இன்று வெளியாகிறது | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் ஹிந்தியில் தடாக், குட்லக் ஜெர்ரி என சில படங்களில் நடித்தார். அந்த படங்கள் அவருக்கு எதிர்பார்த்தபடி பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் மகி என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிப்பதற்கு அவர் தயாராகி வருகிறார். இந்த படத்தில் பெண் கிரிக்கெட் வீரராக நடிக்கிறார் ஜான்வி கபூர். அதற்காக தற்போது தன்னை தயார்படுத்தி வரும் ஜான்வி கபூர், தான் கிரிக்கெட் விளையாடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அப்படி அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள அந்த வீடியோ ரசிகர்களால் டிரோல் செய்யப்பட்டுள்ளது. அதோடு இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் ஒரு ஹிட் பட நடிகையாக தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற முயற்சியில் இருப்பதாக கூறியுள்ள ஜான்வி கபூர், இப்படத்தில் நடிப்பதற்கு முன்பு முழுமையாக என்னை தயார்படுத்திய பிறகே களத்தில் இறங்குவேன் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த படத்தில் கிரிக்கெட்டை நேசிக்கும் ஒரு இல்லத்தரசி வேடத்தில் ஜான்வி கபூர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.