தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிர்த்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆதி புருஷ்'. ராமாயணக் கதையைத் தழுவி மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி முறையில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
மோசமான விஎப்எக்ஸ் டெக்னாலஜியில் படம் உள்ளது என ரசிகர்கள் டீசரைக் கிண்டலடித்தார்கள். பல மீம்ஸ்களும் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்தது. மேலும் படத்தில் இடம் பெற்றுள்ள ராமர் கதாபாத்திரத்திற்கு மீசை, அனுமான் கதாபாத்திரம் தோல் ஆடையை அணிந்திருப்பது, ராவணன் கதாபாத்திரத்திற்கு தாடி ஆகியவை பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
சர்ச்சைகளுக்கு படக்குழு இன்னும் பதிலளிக்கவில்லை மாறாக, கிண்டல்களை சமாளிக்கும் விதமாக பட டீசரை '3 டி'யில் பத்திரிகையாளர்களுக்குக் காட்டி வருகிறது. மும்பையில் நடைபெற்ற திரையிடலுக்குப் பிறகு, நேற்று ஐதராபாத்தில் நடந்தது.
அப்போது பேசிய பிரபாஸ், “3டி வடிவ திரையிடலுக்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி. எனது உருவத்தை 3 டியில் பார்ப்பது த்ரில்லிங்கான அனுபவமாக உள்ளது. லேட்டஸ்ட் மோஷன் கேப்சரிங் டெக்னாலஜியில் படமாக்கப்பட்டுள்ள முதல் இந்தியத் திரைப்படம் இது. தியேட்டர்களில் படத்தைப் பார்க்கும் போது அது சிறந்த அனுபவமாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.