ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் | பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் | டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா | இன்னும் 2 மாதம் டல் சீசன் : பெரிய படங்கள் வராத நிலை | என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு | ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா |

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் பூஜா வைத்தியநாத். பின்னர் சினிமாவிலும் பாட தொடங்கினார். தற்போது தமிழில் பல படங்களில் பாடி வருகிறார். பூஜா சமயங்களில் மாடர்ன் உடையில் போட்டோக்களை பதிவுடுகிறார். சிலர் இந்த ஆடை உங்களுக்கு செட்டாகவில்லை, அப்படி இப்படி என கருத்து பதிவிடுகின்றனர்.
இதற்கு பதிலளித்துள்ள பூஜா, ‛‛சமீபகாலமாக நான் அணிந்திருக்கும் உடை பற்றில சிலர் விமர்சிக்கின்றனர். எனது வசதிக்கும், விருப்பத்தற்கும் ஏற்ப நான் ஆடை அணிகிறேன், உங்களை மகிழ்விக்க அல்ல. இந்த உடை அணியாதே, இது உனக்கு பொருந்தாது என்று கூற உங்களுக்கு உரிமை இல்லை. என் உடல், என் ஆடை, என மகிழ்ச்சிக்காக அணிகிறேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சமூகவலைதளத்தில் என்னை பின் தொடர வேண்டாம்'' என காட்டமாக பதிவிட்டுள்ளார்.




