அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது 169வது படமாக உருவாகி வருகிறது ஜெயிலர் திரைப்படம். இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, விநாயகன், ஹரிஷ் ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இருந்தாலும் இந்த படத்தில் நடிக்கும் முன்னணி கதாநாயகிகள் குறித்த அதிகாரப்பூர்வ விவரம் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. அதேசமயம் சென்னையிலேயே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யாராம் ஸ்டுடியோவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இதை உறுதிசெய்யும் விதமாக இந்த ஸ்டுடியோவின் உரிமையாளர் ஆதித்யாராம், ஜெயிலர் படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதேபோல அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு இங்கே தான் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஷாருக்கானை இங்கேதான் ரஜினிகாந்த் சந்தித்தார். அதேபோல அட்லீயின் பிறந்தநாளன்று தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள இந்த ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடைபெற்றதால் தான் விஜய் நேரிலேயே வந்து அவரை சந்தித்து வாழ்த்தி சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.