விரைவில் 'அயலான்' டீசர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | திருப்பதி ஏழுமலையானை தரிசித்த கீர்த்தி சுரேஷ் | ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய மாமன்னன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு | கங்குலி பயோபிக் சினிமாவாக உருவாகிறது | இயக்குனர் அவதாரம் எடுத்த கீர்த்தி சுரேஷின் சகோதரி | ஜெயிலர் படத்தின் அப்டேட் தந்த தமன்னா | லியோ படத்துடன் கேப்டன் மில்லர் மோதுமா? | மாவீரன் படத்தை கைப்பற்றிய லைகா | 'மல்லி பெல்லி' : சொந்தக் கதையில் நடித்துள்ள நரேஷ் - பவித்ரா | ஆர்.ஜே.ரவிக்கு ஆதரவாக பதிவிட்ட வெண்பா : சம்யுக்தா சொல்வது பொய்யா? |
சின்னத்திரையில் சீரியல் நடிகையாக என்ட்ரி கொடுத்த ஷிவானி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது கேரியரை மொத்தமாக மாற்றிக் கொண்டார். சினிமாவில் நடிக்க முயற்சி செய்த ஷிவானி, இன்ஸ்டாவில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இடம்பிடித்தார். இந்த ட்ரிக் ஓரளவு வொர்க் அவுட் ஆன நிலையில், விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ஷிவானிக்கு கிடைத்தது. எனினும், அது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய ரோல் இல்லை. அதன்பிறகு ஷிவானி சீரியலிலோ, சினிமாவிலோ எந்த ப்ராஜெக்டிலும் நடிக்கவில்லை. இந்நிலையில், ஷிவானி தற்போது '8 தோட்டக்கள்' வெற்றிக்கு ஜோடியாக 'பம்பர்' படத்தில் கமிட்டாகி தனது ஹீரோயின் கனவை நனவாக்கியுள்ளார்.
கேரளா லாட்டரியை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்தை முத்தையாவின் உதவி இயக்குநர் எம். செல்வக்குமார் இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டனர். ஹீரோயின் ஷிவானிக்கு பலரும் தற்போது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.