பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் | கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? | மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் |
ஆர் புரடக்ஸன்ஸ் மற்றும் ஏவிபி சினிமாஸ் சார்பில் ஆர்.முத்துக்குமார் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் நோக்க நோக்க. இவர் தமிழில் ஏற்கனவே தொடக்கம், வெண்ணிலாவின் அரங்கேற்றம் தெலுங்கில் ஸ்ரீராமுடு, கன்னடத்தில் பிரன்ட்லி பேபி , சாக்கலேட் பாய் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கதாநாயகனாக புது முகம் அர்ஜீன் சுந்தரம் அறிமுகமாகிறார். கஞ்சா கருப்பு, ஜாக்குவார் தங்கம், பாவனா, சிந்தியா, ஜோதிராய், சுரேஷ், அபி, பேபி அமுல்யா, பேபி ஜனன்யா ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆல்ட்ரின் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் முத்துகுமார் கூறியதாவது: தொலைக்காட்சி ஊடகத்தில் பணிபுரியும் நேர்மையான நிருபர் பிரதிமா, இந்தியாவில் பணமதிப்பிழப்பு அறிவித்த நேரத்தில் நடந்த சட்டவிரோத பண மாற்றுதலை ஆவணமாக்கி ஒளிபரப்புக்கு செல்லும் வேளையில் சமூக விரோதிகளால் கொலை செய்யப்படுகிறாள். அவளது ஒரே மகளையும் கொன்று விடுகின்றனர். நாயகியின் பெண் குழந்தை எப்படி அந்த கயவர்களை பேயாக உருமாறி பழிவாங்குகிறாள், கடவுள் அவளுக்கு எப்படி உதவுகிறார் என்பதுதான் படத்தின் கதை.