'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ்- ஸ்ருதிஹாசன் நடித்த 3 என்ற படத்தில் காமெடியனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் ஹீரோவாக கமிட் ஆகி விட்டார். அதன் பிறகு அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகி விட்டார் சிவகார்த்திகேயன். டாக்டர், டான் படங்களுக்கு பிறகு அவரது நடிப்பில் அயலான், பிரின்ஸ் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.
தற்போது மாவீரன் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், மனைவி ஆர்த்தியுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . காரணம் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி சிவகார்த்திகேயன், ஆர்த்தி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. அந்த வகையில் அவர்கள் இன்று 12வது திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சிவகார்த்திகேயன்- ஆர்த்தி தம்பதிக்கு, ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் இருக்கிறார்கள்.