இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் |
நெல்சன் இயக்கும் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோர் நடிப்பதாக முதல் பட்டியலை படக்குழு அறிவித்துள்ளது. இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதன்பின் ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
இந்நிலையில் ரஜினி நடிக்கும் 170வது படத்தை சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. என்றாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
அதோடு துல்கர் சலமான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி கூட தனது இரண்டாவது படத்தை ரஜினி நடிப்பில் தான் இயக்குவதாக கூறி வந்தார் . ஆனால் கடைசியில் அந்த நிலை மாறிவிட்டது. அதனால் ஒருவேளை டான் படத்தின் வெற்றியை அடுத்து ரஜினி அவரை அழைத்து வாழ்த்தி இருக்கலாம். அப்போது வழக்கம் போல் அடுத்து நாம் ஒரு படத்தில் இணைவோம் என்று ரஜினி கூறியிருக்கலாம். இந்த நேரத்தில் ரஜினியுடன் சிபி சக்ரவர்த்தி எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த போட்டோதான் இப்படியொரு செய்தி வெளியாவதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கருத்துக்கள் வெளியாகி உள்ளன.