ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‛விருமன்' படம் விமர்சனங்களை தாண்டி வசூலித்து ஹிட் பட வரிசையில் இணைந்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது. இதையடுத்து சர்தார் படம் வெளிவர உள்ளது. அடுத்தப்படியாக இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் இதுவரை ஏற்காத வித்தியாசமான வேடத்தில் நடிக்க கார்த்தி ஒப்புக் கொண்டிருக்கிறாராம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ஒத்திகை மற்றும் பயிற்சியில் கார்த்தி ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் 'பொன்னியின் செல்வன்' எனும் படத்தில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்தி, படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சியில் டூப் இல்லாமல் நிஜமாகவே நடித்து பட குழுவினரின் பாராட்டை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.