2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் ரஜினியுடன் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி என பலர் நடிப்பதாக தொடர்ந்து செய்திகளை வெளியாகி வந்தன. இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் , வசந்த் ரவி ஆகியோரின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இனி மற்ற நடிகர்களின் அறிவிப்பும் ஒவ்வொன்றாக வெளியாகும் எ தெரிகிறது.