குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
மலையாள திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் கோபி சுந்தர். தமிழில் தோழா, பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோபி சுந்தர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பின்னணி பாடகி அம்ரிதா சுரேஷுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்கு காரணம் இந்த அம்ரிதா சுரேஷ், இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும், வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகருமான பாலாவின் முன்னாள் மனைவி என்பதுதான்.
2010ல் ஒரு ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்ட அம்ரிதாவுக்கும் நடுவராக கலந்து கொண்ட பாலாவுக்கும் காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து அந்த இருவருக்கும் கடந்த வருடம் தான் விவாகரத்து ஆனது.
அதேபோல ஏற்கனவே பிரியா என்பவருடன் திருமணம் ஆன கோபி சுந்தர் 2010ல் அவரிடமிருந்து பிரிந்து விவாகரத்துககு விண்ணப்பித்து உள்ளார். இந்த நிலையில் கோபி சுந்தர், அம்ரிதா இருவரும் அடிக்கடி தாங்கள் இணைந்து நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கடந்த இரண்டு மாதங்களாகவே அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். அதனால் இவர்கள் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது அதை அவர்கள் இருவரும் மறுக்கவும் இல்லை.
இந்த நிலையில் அம்ரிதா சுரேஷ் தனது பிறந்தநாளை கோபிசுந்தருடன் இணைந்து கொண்டாடினார். இந்த நிகழ்வில் தங்கை அம்பிகா சுரேஷும் உடன் இருந்தார் இந்த பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள அம்ரிதா, இதுவரை நடந்த எனது பிறந்தநாள் கொண்டாட்டங்களிலேயே இதுதான் மிகமிக சிறந்தது என்று கூறியுள்ளார் அம்ரிதா. மேலும் அதில் கோபி சுந்தர் பெயரை குறிப்பிட்டு எனது கணவர் என்கிற வார்த்தையையும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் இவர்கள் காதல் என்கிற நிலையையும் தாண்டி திருமண பந்தத்திலும் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளார்கள் என்பது உறுதியாகி உள்ளது.