ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

ஆமீர்கான் நடித்துள்ள ‛லால் சிங் சத்தா' படம் அடுத்தவாரம் வெளியாகிறது. ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் என்ற படத்தின் ரீ-மேக் இது. இந்த படத்தை புறக்கணியுங்கள் என்ற குரல் எழுந்துள்ளது. தனது படத்தை புறக்கணிக்காதீர்கள், எனது படத்தை எல்லோரும் பாருங்கள் என கூறினார் ஆமீர்கான். இந்நிலையில் இந்த படத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பு வேண்டுமென்று பப்ளிசிட்டிக்காக உருவாக்கியது போல் உள்ளது என கங்கனா தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி கங்கனா கூறுகையில், ‛‛லால் சிங் சத்தா படத்தை சுற்றி எழுந்துள்ள எதிர்மறை விஷயங்களுக்கு பின்னணியில் ஆமீர்கானே இருக்கலாம். இந்தாண்டு தென்னிந்திய படங்கள் தவிர்த்து எந்த ஹிந்தி படமும் எடுபடவில்லை. ஹாலிவுட் ரீமேக் எப்படியும் வேலை செய்யாது. ஆனால் இப்போது அவர்கள் இந்தியாவை சகிப்புத்தன்மையற்றவர்கள் என்று கூறுவார்கள். இங்கு இந்துவோ, முஸ்லீமோ கிடையாது. பார்வையாளர்களின் ரசனையை ஹிந்தி சினிமா புரிந்து கொள்ள வேண்டும். சகிப்புத்தன்மையற்ற இந்தியா என்று கூறிய ஆமீர்கானே இந்துக்களுக்கு எதிரான ‛பிகே' எனும் பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தார். ஆகவே தயவு செய்து மதம் அல்லது சித்தாந்தம் பற்றி பேசுவதை நிறுத்துங்கள். மோசமான படங்கள், மோசமான நடிப்பில் இருந்து இது திசை திருப்பும் செயல்'' என்கிறார்.