
தனுஷ் உடன் அமெரிக்கா சென்று திரும்பிய மகன்களை கட்டித் தழுவி வரவேற்ற ஐஸ்வர்யா
இந்நிலையில் ஐஸ்வர்யா, ‛பயணி" என்ற வீடியோ ஆல்பத்தை இயக்கியவர் அடுத்து தமிழ் மற்றும் ஹிந்தியில் படம் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் நடித்துள்ள தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் பிரிமியர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது மகன்கள் இருவரையும் அமெரிக்கா அழைத்துச் சென்றிருந்தார் தனுஷ். அங்கு அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியானது.
இந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பி உள்ளார்கள். அதையடுத்து மகன்கள் இருவரையும் கட்டித்தழுவி வரவேற்றுள்ளார் ஐஸ்வர்யா. அதோடு, ‛‛சில நேரங்களில் உங்களுக்கு தேவையானது அவர்களின் அணைப்பு மட்டுமே"" என பதிவிட்டுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!