பிளாஷ்பேக் : தோல்வி அடைந்த 3டி படம் | பிளாஷ்பேக்: ஆர்.எஸ்.மனோகர் நாயகனாக நடித்த லக்ஷ்மி | பாகுபலி பாணியில் உருவாகி இருக்கும் மோகன்லாலின் விருஷபா | ரோபோ சங்கர் மறைவு : அரசியல் தலைவர்கள் மற்றும் திரைக்கலைஞர்கள் இரங்கல் | ரோபோ சங்கர் மறைவு : திரையுலகினர் அஞ்சலி | ரோபோ சங்கர் மறைவு : மருத்துவமனை அறிக்கை சொல்வது என்ன.? | நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் |
பதாய் ஹோ எனும் ஹிந்தி திரைப்படத்தின் அதிகாரபூர்வமான தமிழ் ரீமேக் படம் ‛வீட்ல விசேஷம்'. இப்படத்தை ஆர்ஜே பாலாஜி என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கியுள்ளார். இதில் ஆர்.ஜே.பாலாஜியுடன் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்திருந்தனர். போனி கபூர் தயாரித்திருந்தார். கடந்த மாதம் 11ம் தேதி தியேட்டர்களில் வெளியான இந்தப் படம் தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வருகிற 15ம் தேதி வெளியாகிறது.
50 வயதை தாண்டிய குடும்பத் தலைவி கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கும் போது, அது அவர்களின் மகன்களை சங்கடப்படுத்துகிறது. இந்த குழப்பங்களை கடந்து அந்த குடும்பத்தில் எப்படி சிரிப்பு மலர்கிறது எனும் கதை. காமெடி, செண்டிமென்ட் கலந்து உருவான படம். தியேட்டர்களில் ஓரளவிற்கு வரவேற்பையும் பெற்ற படம்.