திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் படமான தி க்ரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது . இப்படங்களை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் துவங்க உள்ளது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
படத்தில் தனுஷுக்கு வில்லனாக பிரபல நடிகர் விநாயகன் நடிக்க இருக்கிறார். மேலும் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவிற்கு நண்பனாக நடித்த நடிகர் சரவண வேல் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் 1930 ல் நடக்கும் கேங்ஸ்டர் கதை எனவும் கூறப்படுகிறது. தனுஷிற்கு பான் இந்திய திரைப்படமாக இது இருக்கும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.