அநாகரீகமாக பேசிய நெட்டிசனை வச்சு செய்த சுனிதா | சீரியலிலிருந்து விலகிய மனிஷா ஜித் | பாரீஸ் சுற்றுலாவில் பிரியா பவானி சங்கர் | சமந்தாவை நேரில் சந்தித்தால்…. நாக சைதன்யா பதில் | ஆகஸ்ட்டில் மூன்று முக்கிய படங்கள் ரிலீஸ் | டிரணட் ஆகும் சிவன் பாடல் | வசூலை வாரிக் குவிக்கும் சீதா ராமம் | இந்தியாவில் 100 கோடி வசூலித்த தோர்: அதிகாரபூர்வ அறிவிப்பு | தமிழ் ராக்கர்ஸ் : கலை உலகின் வலியை சொல்லும் தொடர்: அறிவழகன் | வெளியானது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 புரோமோ, தமிழில் எப்போது ? |
தமிழ் சினிமாவில் மைனா படம் மூலம் பிரபலமானவர் அமலாபால். அதன் பிறகு விஜய், விக்ரம், தனுஷ் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். விஜய் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவா படத்தில் அமலாபால் நாடியகியாக நடித்தார். அப்போது, ஏ.எல். விஜய்யும் -அமலா பாலும் காதலிக்கத் தொடங்கி, 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் 2017ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் விவாகரத்து பெற்றார்கள். அதையடுத்து இயக்குனர் ஏ.எல்.விஜய், ஐஸ்வர்யா என்ற டாக்டரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
ஆனால் அமலா பால் இப்போது வரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாகவே அவ்வப்போது திருமண வதந்திகளிலும் அவர் சிக்கிக் கொள்கிறார். இப்படியான நிலையில் சமீபத்தில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் அமலாபால் உரையாடிய போது ஒரு ரசிகர், உங்களை திருமணம் செய்து கொள்ள என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறீர்கள்? என்று ஒரு கேள்வி கேட்டார். அதற்கு அமலாபால், அந்த தகுதி என்னவென்று இன்னும் எனக்கு தெரியவில்லை. அதோடு என்னை நானே புரிந்து கொள்ளும் பயணத்தில்தான் இப்போது இருந்து கொண்டிருக்கிறேன். அதனால் என்னை திருமணம் செய்து கொள்ள என்னென்ன தகுதி வேண்டும் என்பதை கண்டுபிடித்தவுடன் கண்டிப்பாக உங்களுக்கு சொல்கிறேன் என்று கூறியுள்ளார் அமலா பால்.