நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

உன்னைத் தேடி, ஆனந்த பூங்காற்றே, வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டுப் பயலே, நான் அவன் இல்லை உள்பட பல படங்களில் நடித்தவர் மாளவிகா. இவர் நடனமாடிய வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்று பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானது.
கடந்த 2007 ஆம் ஆண்டு சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட மாளவிகாவுக்கு தற்போது ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில், 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள மாளவிகா, ஜீவா நடித்து வரும் கோல்மால் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்ற மாளவிகா அங்கு பிகினி உடை அணிந்து தான் நீராடிய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இளவட்ட ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.