அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ராகவா லாரன்ஸ் தற்போது 'ருத்ரன்' படத்தில் நடித்து வருகிறார். ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை பொல்லாதவன்', 'ஜிகர்த்ண்டா' போன்ற திரைப்படங்களை தயாரித்த 'பைவ் ஸ்டார்' கதிரேசன் இயக்கி வருகிறார். இவரின் முதல் இயக்கம் இதுவாகும். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இவர்களுடன் சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. லாரன்ஸ் ஆக்ரோஷத்தோடு கையில் பெரிய இரும்பு ராடு உடன் பலரை அடித்து பந்தாடியபடி ஒருவரை தலைமுடியை பிடித்தபடி போஸ் கொடுத்துள்ளார். கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இந்தப் படம் வெளியாக இருப்பதாகவும் அறிவித்துள்ளனர். ருத்ரன் படத்தை முடித்த பிறகு அதிகாரம் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் லாரன்ஸ் நடிக்கிறார்.