பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி | நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் | பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி | துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன் | 23 ஆண்டுகள் கழித்து ஒக்கடு பட இயக்குனருடன் இணைந்த பூமிகா | தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி | தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது |

தமிழ் திரையுலகில் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஜோடியான விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த புதுமண தம்பதி, பின்னர் திருப்பதிக்கு சென்று பெருமாளை வழிபட்டனர். அதனை தொடர்ந்து சென்னை வந்த அவர்கள் கேரளாவிலுள்ள நயன்தாராவின் வீட்டிற்கு கிளம்பி சென்றனர். இதையடுத்து திருமணம் முடிந்ததும் செலுத்தவேண்டிய நேர்த்திக்கடனாக ஆலப்புழா அருகிலுள்ள செட்டிக்குலங்கரா பத்ரகாளி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும்.
மேலும் கொச்சியில் மதிய உணவுக்காக ஹோட்டலுக்கு செல்ல விரும்பியவர்கள் பிரமாண்டமான ஸ்டார் ஹோட்டல்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு சாலையோரத்தில் இருந்த ஒரு நடுத்தர அசைவ உணவகத்திற்கு திடீர் விசிட் அடித்து அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினார். அங்கேயே தங்கள் மதிய உணவை முடித்துக்கொண்டு கொச்சி அருகில் உள்ள நயன்தாராவின் சொந்த ஊரான திருவல்லாவுக்கு கிளம்பிச் சென்றனர். கோயிலில் வழிபட்டதும் ஹோட்டலில் சாப்பிட்டதும் என நயன் விக்கியின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றன.