அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் | பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள் |

தமிழில் உதயம், மாஸ் என்ற மாசிலாமணி, சகுனி என பல படங்களில் நடித்தவர் கன்னட நடிகை பிரணிதா. இவர் கடந்த ஆண்டு மே மாதம் பிரஜித் என்று தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து கர்ப்பமான பிறகு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சி குறித்த படங்களையும் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது பிரணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிரணிதா வெளியிட்டுள்ள பதிவில், ‛‛உண்மையிலேயே நான் ஒரு அதிர்ஷ்டசாலி. மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜெயஸ்ரீ கடினமான நேரங்களாக இருந்தாலும் அதிர்ஷ்டவசமாக அவரது குழுவில் உள்ள டாக்டர் சுனில் உதவிடன் சீராக பிரசவம் நடைபெற்றது. என்னுடைய பிரசவ வலியை குறைப்பதற்காக முயற்சி எடுத்த டாக்டர் சுபா மற்றும் மயக்க மருந்து நிபுணர் உள்பட மருத்துவக்குழு அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என்னுடைய குழந்தையின் முகத்தை உங்களிடம் காட்டுவதற்கு விருப்பமாக இருக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ள பிரணிதா, மருத்துவமனையில் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.




