'பிக் பாஸ்' ஹிந்தி, சீசன் 19 ஆரம்பம் | அண்ணன் அண்ணன் தான் : விஜய் குறித்து சிவகார்த்திகேயன் | ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' |
மும்பை : நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்த சிறுமிக்கு 'பாலிவுட்' நடிகர் சோனு சூட் உதவியுடன் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து சிறுமி நலமுடன் உள்ளார்.
பீஹாரை சேர்ந்த சிறுமி சவுமுகி குமாரி, பிறக்கும்போதே நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்தார். இதனால், பல்வேறு உடல் உபாதைகளுடன் அவர் சிரமப்பட்டு வந்தார். ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் பாலிவுட் நடிகர் சோனு சூட் இந்த சிறுமி பற்றி கேள்விப்பட்டு அவரை நேரில் சந்தித்தார்.
அவரது மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்தார். குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கிரண் மருத்துவமனையில் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கூடுதலான இரண்டு கைகளும், கால்களும் அகற்றப்பட்டன. அறுவை சிகிச்சை முடிந்து சிறுமி நலமுடன் இருக்கும் புகைப்படங்களை, சோனு சூட் தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.