உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? | ஓடிடி.,யில் விலை போகாத 'கேங்கர்ஸ்' | வேலை நாட்களில் எடுபடாத விஜய்யின் சச்சின் |
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதையடுத்து நோட்டா, கழுகு-2, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் சிறு வேடத்தில் நடித்தார். இடையில் விபத்தில் சிக்கி மீண்டு வந்தார். தற்போது கடமையைச் செய், பாம்பாட்டம், பஹீரா, சிறுத்தை சிவா, தி லைஜன்ட், பெஸ்டி உள்பட பத்து படங்கள் இவர் கைவசம். உள்ளன. இவற்றில் சில படங்களின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.
இதில் எஸ் .ஜே. சூர்யா உடன் இணைந்து அவர் நடித்துள்ள கடமையைச் செய் படம் ஜூன் 24ல் திரைக்கு வருகிறது. அதைத்தொடர்ந்து ரங்கா இயக்கத்தில் அவர் நடித்துள்ள பெஸ்டி என்ற படம் ஜூலை 1ல் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு யாஷிகாவின் படங்கள் வெளியாக உள்ளன.