‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

கர்நாடகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக 10 ஆண்டுகள் பணியாற்றியவர் அண்ணாமலை. தற்போது தமிழக பாஜகவில் இணைந்து மாநில தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் கன்னடத்தில் உருவாகியுள்ள ‛அரபி' என்ற படத்தில் நடிகராகி உள்ளார். இரண்டு கைகளும் இல்லாமல் சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளை செய்த நீச்சல் வீரர் விஸ்வாசின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகியுள்ளது. இதில் விஸ்வாசின் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அதில் விஸ்வாசிற்கு பயிற்சி அளிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த டீசர் வைரலாகி வருகிறது.
முன்னதாக சினிமாவில் நடிப்பதற்கு தயங்கிய அண்ணாமலை இயக்குனர் சொன்ன கதை பிடித்து போனதால் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்ததற்கு இவர் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கி நடித்ததாக கூறப்படுகிறது.