ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ராஜ்யசபா எம்.பி.யாக நியமனம் | ராஜ்யசபா எம்.பி.யாக இளையராஜா நியமனம் : பிரதமர், ரஜினி, கமல் வாழ்த்து | காமெடி கதையில் நடிக்கும் அனுஷ்கா | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு | கடுவாவுக்கு யு/ஏ சான்றிதழ் ; சிக்கலின்றி வெளியாகிறது | மாமன்னன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு | அடேங்கப்பா... 800 தியேட்டர்களில் வெளியாகும் 'தி லெஜண்ட்' | மீண்டும் பட தயாரிப்பில் களமிறங்கும் தனுஷ் | உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி” | சிரஞ்சீவி பெயரில் தவறு செய்த 'காட்பாதர்' குழு |
விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கியவர் அட்லி. தற்போது ஹிந்தியில் ஷாருக்கான்- நயன்தாரா நடிப்பில் லயன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் ரசிகர்களுடன் அட்லீ கலந்துரையாடியபோது, பிகில் படத்தில் நடித்த விஜய்யின் ராயப்பன் கேரக்டரை முழுமையாக சொல்லவில்லையே. அந்த கதையை முழுமையாக சொல்லும் எண்ணம் உள்ளதா? என்று அவரிடத்தில் ஒரு ரசிகர் கேள்வி கேட்டார். அதற்கு, செஞ்சிட்டா போச்சு என்று ஒரு பதில் கொடுத்துள்ளார் அட்லி. இதையடுத்து ஏற்கனவே விஜய்யை வைத்து மீண்டும் அட்லி ஒரு படம் இயக்கப் போகிறார் என்ற செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அவர் அளித்துள்ள இந்த பதிலை தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை அட்லி இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு அந்த கதை பிகில் படத்தில் அப்பாவாக நடித்த ராயப்பன் கேரக்டரின் இளமை கால சம்பவங்களை அடிப்படையாக் கொண்ட கதையில் உருவாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66வது படத்தில் நடித்து வரும் விஜய், அதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67வது படத்தில் நடிப்பவர், அதன் பிறகு அட்லி இயக்கத்தில் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.