தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சி : பாலிவுட் அதிர்ச்சி | மேடையில் கண்கலங்கிய ஐஸ்வர்ய லட்சுமி | ஆண்ட்ரியாவுக்கு முதன்முறை | சீரியலில் மாஸான என்ட்ரி : வனிதாவின் புது ட்ராக் | அழகு நாயகிகளின் ரீ-யூனியன் | சிகரெட் பிடிக்கும் ‛‛சிவன்'', ‛‛பார்வதி'': லீனாவின் அடுத்த ‛‛குசும்பு'' | குந்தவையாக த்ரிஷா : வெள்ளியன்று பொன்னியின் செல்வன் டீசர் ரிலீஸ் | நரேன் வேடத்தை பெண்ணாக மாற்றிய அஜய் தேவ்கன் | காமெடி நடிகரிடம் மன்னிப்பு கேட்ட அடார் லவ் இயக்குனர் | ஐந்து நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட யானை |
விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிஷா கணேஷ். தொடர்ந்து வள்ளி, தெய்வமகள், ஆபிஸ், சரவணன் மீனாட்சி ஆகிய தொடர்களில் நடித்து வந்தார். நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின் திரையில் பெரிதாக தோன்றாத அவர் கடைசியாக நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்திருந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சீரியலில் என்ட்ரி கொடுப்பதாக தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நிஷா வக்கீல் உடையுடன் போட்டோவையும் 'கீதா சுப்பிரமணியன்' என்ற அவரது கதாபாத்திரத்தின் பெயரையும் வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளார். இருப்பினும் அவர் எந்த சீரியலில் நடிக்கிறார் என்பது குறித்து அந்த பதிவில் வெளியிடவில்லை. அதேசமயம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரில் தான் நிஷா கணேஷ் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தவாரம் முதல் அவர் இந்த தொடரில் இடம் பெற உள்ளார்.