ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
உலகமே எதிர்பார்த்து காண துடித்துக் கொண்டிருக்கும் ஒரு படம் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தின் அடுத்த பாகம். இந்த படத்திற்கு 'அவதார் : தி வே ஆப் வாட்டர்' என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
முதல் படமான “அவதார்” படத்தின் சம்பவங்களுக்கு பிறகு, ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலகட்டத்தை கடந்து , சல்லி குடும்பம் (ஜேக், நெய்திரி மற்றும் அவர்களது குழந்தைகள்), அவர்களைப் பின்தொடரும் பிரச்சனைகள், ஒருவரையொருவர் பாதுகாப்பாக வைத்திருக்க, அவர்கள் செல்லும் தூரம், அவர்கள் உயிருடன் இருக்க போரிடும் போர்கள் மற்றும் அவர்கள் அடையும் துயரங்கள் அதை கடந்த அவர்களின் வெற்றி தான் இப்படத்தின் கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது .
ஜேம்ஸ் கேமரூன் இயக்கி, கேமரூன் மற்றும் ஜான் லாண்டாவ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிப் கர்டிஸ், ஜோயல் டேவிட் மூர், சிசிஹெச் பவுண்டர், எடி பால்கோ, ஜெமைன் கிளெமென்ட், ஜியோவானி ரிபிசி மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற டிச., 16ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க சுமார் 160 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.