ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தமிழில் சிலம்பரசன் நடித்த 'ஈஸ்வரன்', ஜெயம் ரவி நடித்த 'பூமி' படங்களின் மூலம் ஒரே சமயத்தில் அறிமுகமானவர் நிதி அகர்வால். தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக 'ஹரிஹர வீர மல்லு' படத்திலும், தமிழில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.
நிதி தற்போது ஆணுறை விளம்பரம் ஒன்றைப் பற்றி பிரமோஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது மட்டுமல்ல அந்த விளம்பரத்தையும் தனது தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த விளம்பரத்தை ஒரே நாளில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அந்த விளம்பரத்தைப் பார்த்த ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்டுகளைப் பதிவிட்டுள்ளனர்.
சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி ஓரளவிற்கு பெயர் கிடைத்த பின் தங்களது சமூக வலைத்தளங்களில் பணம் வாங்கிக் கொண்டு பல நடிகைகள் விளம்பரம் செய்கிறார்கள். ஆனாலும், இம்மாதிரியான விளம்பரங்களை எந்த கதாநாயகிகளும் செய்வதில்லை. ஆனால், நிதி அகர்வால் இப்படி செய்திருருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.