இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
கள்ளன் பட இசை வெளியீட்டு விழாவில் பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி அர்ஜுனா கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது : "எவ்வளவு நல்ல படம் எடுத்தாலும் அதை சரியான நேரத்தில் ரிலீஸ் செய்தால் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். நேரம் என்பது இங்கே ரொம்ப முக்கியம். அப்படி நேரத்தை கடைப்பிடிக்க தவறியதால் தான், நான் மிகப்பெரிய வாய்ப்பு ஒன்றை இழந்தேன்.
சீனுராமசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. மறுநாள் அவரை சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கியிருந்தார். ஆனால் அந்த சமயத்தில் எனது உறவினர்கள் தங்களது வீட்டு திருமணத்திற்காக பத்திரிக்கை கொடுக்க வந்திருந்தார்கள். அதனால் குறித்த சமயத்தில் அவரை சந்திக்க முடியவில்லை. அதன் பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு அமையாமலே போய் அந்தப்படத்தில் விஜய்சேதுபதி நடித்து மிகப்பெரிய ஹிட்டாகி தேசிய விருதும், ஒரு சிறந்த நடிகரையும் நமக்கு தந்தது. அந்தப் படம்தான் தென்மேற்கு பருவக்காற்று..
அதேபோல நான் ரெட்டச்சுழி படத்தில் நடித்த சமயத்தில் அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் சந்திரா.. மிகவும் கோபக்காரர். அப்போது எங்களுக்குள் சண்டைகள் வருவதுண்டு. ஒரு சமயம் இந்த கள்ளன் படத்தின் கதையை என்னிடம் அவர் கூறியிருக்கிறார். ஆனால் நான் நெடுஞ்சாலை படத்தின் கதையை போலவே இருப்பதாக சொல்லி இதில் நடிக்க மறுத்துவிட்டதாக அவர் இப்போது கூறுகிறார்..
ஆனால் அப்படி கூறியதாக எனக்கு ஞாபகமில்லை. அதேசமயம் நாம் இருவரும் இணைந்து ஒன்றாக பணியாற்றினால் நமக்குள் கட்டிப்புரண்டு சண்டை போடும் அளவுக்கு சச்சரவுகள் வரும். அதனால் உங்கள் படத்தில் பணியாற்ற மாட்டேன் என்று வேடிக்கையாக நான் சொன்னது மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. இருந்தாலும் இந்த கள்ளன் படத்தில் நான் நடித்து இருக்க வேண்டும் என இப்போது நினைக்கிறேன். அப்படி மறுத்ததற்காக இந்த மேடையிலேயே இயக்குனர் சந்திராவிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் ஆரி அர்ஜுனா.