ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தார். கோவிட்டுக்குப் பிந்தைய பாதிப்புகளால் சிகிச்சை மேற்கொண்டதாக ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார்.
தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி மீண்டும் தன்னுடைய 'முசாபிர்' ஆல்பப் பணிகளை ஆரம்பித்துள்ளார். அது குறித்து சமூக வலைத்தளங்களில் படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். “நீங்கள் அதைப் பார்க்கும் போது ஒரு மேஜிக் உருவாவதைப் பார்க்க முடியும், அது ஒரு புதிய உலகம்… மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டேன். மீண்டும் திரும்பியது சிறப்பு…. நான் இங்கு நீண்ட நாட்களாக இல்லாததால்… படப்பிடிப்பில் இருப்பது போல் எதுவும் சிறப்பில்லை…” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா தற்போது 'முசாபிர்' என்ற ஆல்பம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த ஆல்பத்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. தமிழில் 'பயணி', தெலுங்கில் 'சஞ்சாரி', மலையாளத்தில் 'யாத்ராக்காரன்', ஹிந்தியில் 'முசாபிர்' என்றும் இந்த ஆல்பம் வெளியாக உள்ளது. தமிழ்ப் பாடலை அனிருத் பாடுகிறார். போஸ்டரில் ஐஸ்வர்யாவின் பெயர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என போடப்பட்டுள்ளது.