கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? |
லண்டனை சேர்ந்த மாடல் அழகி எமி ஜாக்சன். மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமாகி ரஜினியுடன் 2.0 வரை நடித்தார். தற்போது லண்டனில் வசித்து வரும் அவர் அங்கு சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக பீட்டா அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரின் காரணமாக ஆயிரக் கணக்கான உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில பாதாள அறைகளில் உள்ள பச்சிளம் குழந்தைகளின் வீடியோவை வெளியிட்டு எமி ஜாக்சன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அது வருமாறு: உக்ரைனின் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. உக்ரைன் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம். அவர்களுக்கு அவசர நிதி தேவை. தயவுசெய்து எனது பயோவில் உள்ள இணைப்பின் மூலம் நன்கொடை அளிக்கவும். என்று குறிப்பிட்டுள்ளார்.