ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தமிழ்த் திரையுலகில் இளம் வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் ஷங்கர் ராஜா. தற்போது 42 வயதாகும் யுவன், அவருடைய 18வது வயதில் 1997ம் ஆண்டு வெளிவந்த 'அரவிந்தன்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமனார். கடந்த 25 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் அறிமுகமாகி நேற்றுடன் 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. அதை முன்னிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று இரவு நட்சத்திர ஓட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
பொதுவாகவே எந்த ஒரு திரைப்பட விழாவிலும் சில வார்த்தைகள் மட்டுமே பேசும் யுவன், நேற்று நீண்ட நேரம் பேசினார். அப்போது ஒரு சுவாரசியத் தகவலையும் பகிர்ந்து கொண்டார். நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் அவருடைய தீவிர ரசிகர்கள் என்ற தகவலைப் பகிர்ந்தார்.
“விஜய்யுடன் இருக்கும் ஜெகதீஷ் ஒரு நாள் திடீரென ஒரு புகைப்படத்தை எனக்கு அனுப்பியிருந்தார். விஜய் சாரோட மகன், யுவனிசம் என்று எழுதப்பட்ட ஷர்ட்டை அணிந்திருந்த போட்டோவை எனக்கு அனுப்பியிருந்தாங்க. இதைப் பார்த்துட்டு எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னே தெரியலை. நான் 'பன்டாஸ்டிக் ப்ரோ' அப்படின்னு பதில் அனுப்பினேன். அப்புறமா விஜய் சாரை மீட் பண்ண போகும் போது, நான்தான் இதை உங்களுக்கு அனுப்ப சொன்னேன்னு விஜய் சார் சொன்னாரு. என் பையன் உங்களோட பயங்கரமான பேன். இது யுவனுக்குத் தெரியணும்னு அனுப்ப சொன்னேன்னாரு. அதை நான் வெளிய கூட போஸ்ட் பண்ணல. ஏன்னா, அதை ரொம்ப பர்சனல்னு நினைக்கிறேன். நான் ரொம்ப சந்தோஷப்பட்ட விஷயம் இது,” என்றார்.