திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தமிழில் இதே நாளில் பிப்ரவரி 26, 2010ம் ஆண்டு வெளிவந்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் கிளைமாக்சில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார். ஆனால், அந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ஏ மாயா சேசவே' அவர்தான் கதாநாயகி. தமிழில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தை தெலுங்கில் சமந்தா ஏற்று நடித்திருந்தார். தெலுங்கில் முதல் படமே அவருக்கு பெரிய வெற்றியையும், நல்லதொரு அறிமுகத்தையும் பெற்றுத் தந்தது.
ஆனால், சமந்தா முதன் முதலில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமான படம் 'மாஸ்கோவின் காவிரி'. சில பல காரணங்களால் அந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போனதால் 'ஏ மாயா சேசவே' அவருடைய முதல் கதாநாயகிப் படமாக அமைந்தது. அதன்பின் தமிழ், தெலுங்கில் பல வெற்றிகளைப் பெற்றார். தனது முதல் பட கதாநாயகனாக நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு கடந்த வருடம் அவரை விட்டுப் பிரிந்தார்.
திரையுலகில் 12 வருடங்களை நிறைவு செய்துள்ள குறித்து சமந்தா, “திரையுலகிற்குள் வந்து இன்றுடன் 12 வருடங்கள் ஆகிறது. லைட்ஸ், கேமரா, ஆக்ஷன் என 12 வருட காலமாக இருக்கும் ஈடு இணையில்லா தருணம் இது. உலகின் சிறப்பான, விசுவாசமான ரசிகர்களைப் பெற்றதற்காக மிகவும் நன்றியுடன் இருக்கிறேன்,” என சமூக வலைத்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.