'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

டம்மி டப்பாசு படத்தில் அறிமுமான ரம்யா பாண்டியனை அடையாளம் காட்டியது ஜோக்கர் படம். அதன்பிறகு ஆண்தேவதை, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படங்களில் நடித்தார். சினிமா வாய்ப்புகள் குறையவே சின்னத்திரை பக்கம் சென்றார். அங்கு சில நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தார். பிக் பாஸ், குக்வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தற்போது இடும்புக்காரி, நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ரம்யா பாண்டியன் பிஎம்டபிள்யூ சொகுசு கார் வாங்கி உள்ளார். புதிய காருடன் நிற்கும் படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் அண்ணன் மகள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் பிரபலங்களான ஷிவானி மற்றும், சாக்ஷி அகர்வாலும் சொகுசு கார் வாங்கியது குறிப்பிடதக்கது.




