''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
ஹிந்தித் திரையுலகின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவரான பப்பி லஹரி மும்பையில் தனது 69வது வயதில் காலமானார். அவரது மறைவு ஹிந்தித் திரையுலகினரை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வாரம் தான் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் மறைந்து இந்தியத் திரையுலகத்தையே சோகத்தில் மூழ்க வைத்தார். அதற்குள் மற்றொரு சோகமாக பப்பி லஹரி மறைவு நிகழ்ந்துள்ளது.
ஹிந்தியில் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த பப்பி லஹரி பெங்காலி, தெலுங்கு, தமிழ், கன்னடம், குஜராத்தி ஆகிய மொழிப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தமிழில் 1983ம் ஆண்டில் வெளிவந்த 'அபூர்வ சகோதரிகள்', 1985ல் வெளிவந்த 'பாடும் வானம்பாடி', 1987ல் வெளிவந்த 'கிழக்கு ஆப்ரிக்காவில் ஷீலா' ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
'அபூர்வ சகோதரிகள்' படத்தில் 'எங்கெங்கே நீதான்..நான் அங்கங்கே…, அன்னை என்னும் ஆலயம்….,' ஆகிய பாடல்கள் அப்போது சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தன. ஹிந்தியில் மிதுன் சக்கரவர்த்தி நடித்து 1985ல் வெளிவந்த 'டிஸ்கோ டான்சர்' படம் தமிழில் ஆனந்த பாபு நடிக்க 'பாடும் வானம்பாடி' என ரீமேக் ஆனது. ஹிந்தியில் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது போல தமிழிலும் சூப்பர் ஹிட்டானது.
குறிப்பாக 'நான் ஒரு டிஸ்கோ டான்சர்' பாடல் அந்தக் காலத்தில் பள்ளி, கல்லூரி ஆண்டு விழாக்களில் கண்டிப்பாக இடம் பெற்ற ஒரு பாடலாக இருந்தது. அந்தப் படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடலான 'வாழும் வரை போராடு' ஒரு தன்னம்பிக்கைப் பாடலாக ஒலித்தது. படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்களும் ஹிட் பாடலாக அமைந்ததால் தமிழிலும் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.
பப்பி லஹரி தமிழில் இசையமைத்தது மூன்று படங்கள்தான் என்றாலும் அவரது இசையால் இங்கும் முத்திரை பதித்தார் என்பதை மறக்க முடியாது.