இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கொச்சி விமான நிலையத்தில் 20 கிலோ தங்கம் கடத்தியதாக பாயிஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது இந்த வழக்கு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
இந்த நிலையில் பாயிசுக்கு பல நடிகர், நடிகைளுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நடிகை அக்ஷரா ரெட்டிக்கு அமலாக்கத்துறை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார்.
இதை தொடர்ந்து நேற்று கோழிக்கோடு அமலாக்கத்துறை அலுவலகத்தில் அக்ஷரா ரெட்டி ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கம் கடத்தல் மற்றும் பயசுடன் உள்ள தொடர்பு பற்றி 2 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
நடிகை அக்ஷரா ரெட்டி, மிஸ்.ஆந்திர பிதேரசம் அழகி போட்டியில் டைட்டில் வென்றவர். பிக் பாஸ் உள்ளிட்ட ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றவர். விஜய் டி.வி நடத்திய வில்லா டூ வில்லேஜ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தார். பில்கேட்ஸ் என்ற கன்னட படத்திலும், தாதி என்ற தெலுங்கு படத்திலும், காசு மேல காசு என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.