'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழில் மேயாதமான் படத்தில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அதையடுத்து கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர் உள்பட சில படங்கள் எடுத்தவர் தற்போது குருதி. ஆட்டம். பொம்மை. யானை. ருத்ரன். திருச்சிற்றம்பலம் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். ராஜவேல் என்பவரை கடந்த பத்து வருடங்களாக காதலித்து வரும் பிரியா பவானி சங்கர், அவரது பிறந்த நாளையொட்டி தனது சமகவலைதளத்தில் ஒரு புகைப்படத்துடன் வாழ்த்து செய்தியும் வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛நீ ஒரு மோசமான டீன்ஏஜ் பாயாக இருந்து இப்போது ஒரு அற்புதமான மனிதராக மாறி விட்டாய். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. எப்போதுமே புன்னகை, சாகசங்கள், அன்பு, நட்பு, அமைதி ,ஆரோக்கியம் என அனைத்தும் உனக்கு கிடைக்க வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். அதோடு நான் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் உனக்கு பிடிக்காது என்று தெரியும். அதனால் தான் இதனை பதிவு செய்தேன்'' என தெரிவித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.