22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
ஐடி துறையில் பணியாற்றி வரும் வெங்கட் ரெட்டி தயாரித்து, நடிக்கும் படம் யாரோ, அவருடன் உபாசனா, சி.எம்.பாலா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள். சந்தீப் சாய் இயக்குகிறார், கே.பி.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார், ஜோஸ் பிராங்க்ளின் இசை அமைக்கிறார். பிப்ரவரி 4ம் தேதி வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் சந்தீப் சாய் கூறியதாவது: நானும் வெங்கட்டும் அலுவலகத்தில் சக ஊழியர்களாக இருந்தோம், நாங்கள் இருவரும் எப்பொழுதும் சினிமா மீது எங்களுக்குள்ள தீராத ஆர்வத்தை பகிர்ந்துகொண்டோம். வேலையை விட்டுவிட்டு ஒரு குறும்படம் எடுத்தேன். அதைப் பார்த்த வெங்கட், நாங்கள் இணைந்து ஒரு முழு நீள திரைப்படத்தில் பணியாற்றுவோம் என்று ஒப்புக்கொண்டார்.
இது மர்டர் மிஸ்ட்ரி, சைக்கோ த்ரில்லர், ஹாரர் இந்த மூன்றின் கலவையாக உருவாகி இருக்கிறது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனித்த பங்களாவில் பெரும்பகுதி கதை நடக்கும். படத்தின் ஹீரோ ஒரு ஆர்கிடெக்ட் தன் பணி நிமித்தமாக அந்த பங்களாவுக்கு செல்கிறார். அந்த பங்களாவிலும் அதை சுற்றிலும் தொடர்ச்சியாக கொலை நடக்கிறது. அதன் பின்னணி என்ன என்பதை வித்தியாசமான பார்வையில் சொல்கிறோம். என்றார்.