ஆகஸ்ட் 12ல் லத்தி வெளியீடு | சிவாஜி குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றொரு நடிகர் | 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் மகாநதி ஷங்கர் | பத்து தல படத்திற்கு தயாரான சிம்பு | சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் | விஜயின் 67வது படம்: உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்! | வெளிநாட்டில் பட்டம் பெற்ற சரத்குமார் - ராதிகாவின் மகன் | சிறு பட்ஜெட் படங்களை வெளியிட உதயநிதிக்கு சீனு ராமசாமி கோரிக்கை! | நடிகையாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி! |
ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இதையடுத்து விஜய் நடிக்கும் 67வது படத்தை அவர் இயக்கப் போவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நேரத்தில் தற்போது டோலிவுட்டில் புஷ்பா படத்தில் நடித்துள்ள அல்லு அர்ஜுனை வைத்து அட்லி தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிகில் படத்தை இயக்கிய பிறகு பல பிரபல நடிகர்களிடத்தில் கதை சொல்லி வந்த அட்லி, அல்லு அர்ஜுன் இடத்திலும் ஒரு கதை சொல்லி இருக்கிறார். அந்த கதையில் நடிப்பதற்கு தற்போது சம்மதம் தெரிவித்திருக்கிறாராம் அல்லு அர்ஜுன். அதன் காரணமாகவே ஷாரூக்கான் படத்தை இயக்கி முடித்ததும் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்குவார் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. அதோடு, அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்கும் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரமாண்டமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.