பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் |

சாய்பல்லவி தேவதாசியாக நடித்துள்ள தெலுங்கு படம் ஷியாம் சிங்கா ராய். இதில் நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இது பூர்வஜென்ம பேண்டசி கதை. கிருத்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன், ராகுல் ரவீந்திரன், முரளி சர்மா மற்றும் அபினவ் கோமதம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் வெங்கட் போயனபள்ளி தயாரித்திருந்தார். இந்த படம் கடந்த டிசம்பர் 24ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியானது. இந்த நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாகியுள்ளது.